மணிச்சத்து (பாஸ்பரஸ்) பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் வழக்கத்திற்கு மாறாக அடர் பச்சை நிறமாக மாறும், சில நேரங்களில் இது அழுக்கு அல்லது மங்கலான அடர் பச்சை என்று விவரிக்கப்படுகிறது. பற்றாக்குறையைக் கண்டறிய நிறம் மட்டும் போதுமானதல்ல. இலைகள் குறுகலாகவும், குட்டையாகவும் மற்றும் வழக்கத்தை விட மிகவும் செங்குத்தாகவும் மாறும். தாவர வளர்ச்சிக் குறைபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், தண்டுகள் மெலிதாகவும் மற்றும் பலவீனமாகவும் இருக்கலாம். தாவரங்களின் வளர்ச்சி குன்றி, பயிர் நிலைபெறுதல் மற்றும் அதன் பிந்தைய வளர்ச்சி மெதுவாக இருக்கும். தூர்கள் உருவாவது பெருமளவு குறையும். பயிரில் குறைவான இலைகள் மற்றும் குறைவான கதிர்கள் உருவாகும். இளம் இலைகள் ஆரம்பத்தில் ஓரளவு ஆரோக்கியமாகத் தோன்றலாம், அதேசமயம் பற்றாக்குறை அதிகரிக்கும் போது முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாக மாறி இறக்கக்கூடும். அந்தோசயனின் (anthocyanin) நிறமி குவிவதால் சில நெல் ரகங்களின் இலைகள் சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறும். தாவர வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைவது தாமதமாகும், பெரும்பாலும் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேல் தாமதமாகலாம். கடுமையான பற்றாக்குறை பூப்பதைத் தடுக்கலாம். ஒரு கதிரில் உள்ள மணிகளின் எண்ணிக்கை, எடை மற்றும் தரம் ஆகியவை குறையக்கூடும். மிகக் கடுமையான பற்றாக்குறை அதிகப்படியான பதர் உருவாகவதற்கு அல்லது நெல் மணிகள் உருவாகாமல் போவதற்கு வழிவகுக்கும். பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் பற்றாக்குறைகள் ஒன்றாக ஏற்படும் போது, பாஸ்பரஸ் பற்றாக்குறைக்கு மட்டுமே உரிய அடர்-பச்சை நிறத்தில் காட்சியளிப்பதற்குப் பதிலாக தாவரங்கள் வெளிர் பச்சை நிறமாக மாறக்கூடும். குறைபாட்டைக் கண்டறிவதற்கான முக்கிய வேறுபாடு: செங்குத்தான, குறுகிய இலைகள், மெல்லிய தண்டுகள் மற்றும் குறைவான தூர்களுடன் கூடிய அடர்-பச்சை நிறம் இருப்பது பாஸ்பரஸ் பற்றாக்குறையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மிதமான பாஸ்பரஸ் பற்றாக்குறையை வெறும் கண்களால் கண்டறிவது கடினம். இதற்கு முன் அனுபவமும் கூர்ந்த கவனிப்பும் தேவை. முறையான மண் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கையாக உரமிடுதல் ஆகியவை இந்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை